Wednesday, November 24, 2010

நண்பர் ரெஜின் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு

என்னுடைய முந்தைய பதிவான இந்தியர்கள் எல்லோரும் இந்துக்களா என்ற பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டங்களும் இட்டிருந்தீர்கள், அதற்கு என்னுடைய நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதில் உங்களால் சில கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன, அதற்கு என்னுடைய நிலைப்பாட்டினை பதிலாக தெரிவித்து இருந்தேன், பொதுவாக யாரும் யாருடைய மதத்தினை பற்றியும் முழுமையாக அறிந்து இருக்க முடியாது, அவரவர்கள் படித்து தெரிந்து கொண்ட கருத்தினையோ அல்லது அவர்கள் கேள்விப்பட்ட விஷயத்தினையோ கொண்டே தங்களுடைய நிலைப்பாட்டினையும் கருத்தினையும் வெளிப்படுத்துகிறார்கள், நானும் தங்களுடைய தளத்தினை பார்வையிட்டேன், தங்களுடைய மார்க்கத்தினை பற்றி விரிவாக எழுதி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

கடைசியாக நீங்கள் என்னுடைய தளத்தில் வெளியிட்ட பின்னூட்டம்

//சகோ.ஆரோக்கியமான பின்னூட்டவிவாதங்களை நான் அதிகம் விரும்புபவன்.என்றுமே உடன்பட்டவன்.


தங்களின் பேச்சை கொண்டு தாங்கள் நாத்தீகரா,அல்லது மத உடன்பாடுடையவரா என அறிய முடியவில்லை.

இஸ்லாமிய நண்பர்கள் சிலரின் போக்கு தங்களை அவ்வாறு இஸ்லாம் குறித்து எண்ணச்செய்தது குறித்து வருந்துகிறேன்.இஸ்லாத்தில் பிற மதங்களை பழிக்கவோ,இகழவோ,அனுமதி இல்லை.அவர்களை உதாரணமாக கொள்ளவேண்டாம்.

அவர்கள் அழைக்கும்,அல்லாஹ் அல்லாதவற்றை திட்டாதீர்கள். - 6.108 அல் குர்ஆன்

காஃபா பற்றி:காஃபா என்பது நபி இபுராஹிம்(அலை) அவர்களால் இறைவனுக்காக உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயம்.அது பின்னர் நபி முஹம்மது (ஸல்)அவர்களின் காலத்தில் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு,உட்புறம் 6 தூண்களால் கட்டப்பட்ட கட்டிடம்.உட்புறம் ஒன்றூமே இல்லை.வெற்று இடமே.இஸ்லாமியர்கள் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் அதன் திசையை நோக்கி தொழுகிறோம்.மற்றபடி,அக்கட்டிடத்தை வணங்குவதில்லை.

நன்றி
அன்புடன்
ரஜின்

இந்த பின்னூட்டத்திற்கு, மற்றொரு பின்னூட்டம் பதிலாக அளித்து இருக்கலாம், எனினும் என் மனதின் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இது ஏதுவாக இருக்கும் என தோன்றியது, அதனால் இந்த பதிவு.

சகோதரரே எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு, நானும் தீவிரமான கடவுள் பக்தன் தான், ஆனால் எனக்கு கடவுள் மேல் மட்டும் நம்பிக்கை உள்ளதே தவிர மதத்தின் மேல் இல்லை, எந்த மதமாக இருந்தாலும் அதனை முழுமையாக கற்று படித்து உணர்ந்து வாழ்பவர்கள் யாரும் இருக்க முடியாது, அப்படி யாராவது இருந்தாலும் அது சொற்பமானவர்களாகத்தான் இருக்க முடியும், அப்படி யாராவது இருந்தால் அவருக்கு என் வாழ்த்துக்கள். இப்படி அரைகுரையாக மத்ததை பற்றி தெரிந்து கொண்டு என்னுடைய மதம்தான் சிறந்தது, என்னுடைய மார்க்கம்தான் உண்மையானது என போலியாக விவாதிக்க நான் விரும்பவுமில்லை, தங்களுடைய தளத்தில் இந்து எனும் சொல் மதத்தினை குறிக்கின்ற சொல் இல்லை, அது இடத்தினை குறிக்கும் சொல் என குறிப்பிட்டு இருந்தீர்க, அது உங்களை பொறுத்த வரையில் அப்படியே இருக்கட்டும் ஆனால் இந்த நாட்டை பொறுத்த வரையில் அது ஒரு மதமாகும், பின்னர் இப்படி குறிப்பிட்டு இருக்கிறீர்கள்

//ஹிந்து வேதத்தை பின்பற்றாதவனுமான
ஹிந்து வேதங்களை அறியாதவனுமான,
ஹிந்து வேதத்தின் படி வாழாதவனுமான,
ஹிந்து வேதம் கூரும் தெய்வங்களை வணங்காதவனுமான,

ஹிந்து வேதங்களை மறுப்பவனுமான,//

சரி ஹிந்து மதத்தில் இப்படி இருக்கிறது, ஒத்துக் கொள்கிறேன், அது போலவே

இஸ்லாம் வேதத்தை பின்பற்றாதவனுமான
இஸ்லாம் வேதங்களை அறிதாதவனுமான
இஸ்லாம் வேதத்தின்படி வாழாதவனுமான
இஸ்லாம் வேதத்தின்படி 5 நேரம் தொழுகை செய்யாதவனுமான
இஸ்லாம் வேதங்களை மறுப்பவனுமான

இஸ்லாமியனும் இருக்கிறான் அல்லவா? இல்லை என்று சொல்லாதீர்கள், எனக்கு தெரியும், மேற்கூறிய எதையும் பின்பற்றாமல், ஊதாரித்தனமாக, தங்கள் இஷ்ட்டப்படி திரியும் எத்த்னையோ முஸ்லீம்களை நானும் பார்த்துள்ளேன், ஏன் என்னுடைய நண்பர்களில் ஒருவனும் அப்படி பட்டவனே, உலக அளவில் பின்லேடன் என்று ஒருவர் இல்லையா? அவர்களை பற்றி கேட்டால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? அவன் இஸ்லாமியராக இருக்க தகுதி இல்லாதவன் என்று, அதயே எல்லா மதத்திற்கும் பொறுத்தி பாருங்கள் விடை எளிதாக கிட்டும், இந்து மதம் துவேசத்தையே போதிக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம், உங்கள் மார்க்கத்தில் இப்படி செய்பவர்களை சரி செய்ய என்ன வழி உள்ளது என்று கூறுங்கள்? அதை எந்தளவு நிரைவேற்றி உள்ளீர்கள் என கூற முடியுமா? விடை ஏமாற்றம்தான்.

அதனால்தான் கூறுகிறேன், எந்த ஒரு மதமும் மனிதனின் ஒழுக்க வாழ்விற்கே வகுக்கப்பட்டது, அதில் சில குறை, நிறைகள் எல்லா மதத்திலும் இருக்கலாம், அதை பெரிதுபடுத்தி பேசுகிறேன் என்று கிளம்பினால் அது பிரச்சனையிலேயே முடியும், இஸ்லாம் மதத்தினை போலவே இந்து மதத்தை சார்ந்தவர்களும் தீவிர மதப்பற்று என்று கிளம்பினால் இங்கு யாரும் நிம்மதியாக வாழ முடியாது, ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சாக வேண்டியதுதான், 
சிறுபான்மையினரோ பெரும்பான்மையினரோ எல்லாருக்கும் இந்த நாட்டில் பிரச்சனைகள் உள்ளது, சிறுபான்மை சமூகத்தவரை மட்டும் குறிவைத்து பிரச்சனைகள் தோன்றுகின்றன எனற கருத்தை ஏற்க முடியாது, அதற்கு நக்சல் தீவிரவாதம், மாவோயிஸ்டு பிரச்ச்னை போன்றவை உதாரணங்கள். தீவிரவாதம் என்றாலே பிரச்சனைதான், மதத்தீவிரவாதம் விதிவிலக்கல்ல.

கடைசியாக மதத்தை புரிய வைக்கிறேன், மார்க்கத்தை புரிய வைக்கிறேன் என்று நான் கிளம்பவில்லை, என்னுடைய மனதில் சாதாரணமாக தோன்றிய ஒரு சிறு சந்தேகமே என்னுடைய முந்தைய பதிவு, அதனை நீங்களும் எளிதாக புரிந்து கொண்டீர்கள், நன்றி, என்னை பொறுத்த் வரையில் இன்று நாம் வாழும் வாழ்க்கை எந்தளவு நிலையானது? யாரும் சொல்ல முடியாது? இன்றைக்கு இருப்பவன் நாளைக்கு இல்லாமலும் போகலாம். இதில் மதத்தினை பெரிதாக நினைத்து என்ன வரப் போகிறது? மதத்தால் ஒரு வேளை சோறு போட முடியுமா? ஒரு மயிரும் புடுங்க முடியாது. பின்னர் எதற்காக ஒரு மதத்தின் மேல் பற்று வைக்க வேண்டும்? கடவுள் ஒருவரே, அது எந்த இந்து கடவுளாகட்டும், கிறிஸ்தவ கடவுளாகட்டும், இஸ்லாமிய கடவுளாகட்டும் எனக்கு எல்லாமே ஒன்றுதான், நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளியிலேதான், நான் ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் மசூதிக்கு சென்று வணங்கி விட்டுதான் வருவேன், எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை, எந்த மதமும் என்னை ஒன்றும் செய்யவில்லை, என் மனதில் கடவுள் மட்டுமே.
இந்த விசயத்தில் கமல் அவர்களின் கருத்தை சிறிது மாற்றி சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கடவுள் மட்டும் கண்டால் மதங்கள் தெரியாது
மதத்தை மட்டும் கண்டால் கடவுளே தெரியாது

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு கோயில்கள், சர்சுகள், மசூதிகள் கட்டபட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை, அதற்கு பதிலாக நான்கைந்து கழிப்பிடங்கள் கட்டி கொடுத்தால் மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
இப்படி மதம் மதம் என்று மதங்களை வளர்க்காமல் எத்தனையோ ஆண்டுகால பழமை வாய்ந்த தமிழ்மொழியை வளர்ப்போம். வருங்கால சந்ததியினருக்கு மதங்களை பற்றி சொல்லி கொடுக்காமல் இருந்தாலே, மனித நேயம் தானாக வளரும்.

இறுதியாக தந்தை பெரியார் சொன்னது ‘’ மதங்களை மற மனிதனை நினை’’

என்னுடைய இந்த பதில் முழுக்க முழுக்க உங்களுக்காக மட்டுமே, இதை எந்த திரட்டியுலும் நான் இணைக்க போவதில்லை, இதில் உங்களுக்கு மாற்று கருத்துகள் நிறைய இருக்கலாம், அதை பற்றி கவலை இல்லை, இது முழுக்க முழுக்க என்னுடைய நிலைப்பாடே, இதில் எந்த கருத்தாவது தங்களின் மனதினை புண்படுத்துமானால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.


ஜெய்ஹிந்த் - இங்க பாருடா இதுலயும் ஹிந்த்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


2 comments:

  1. சகோ.ஹிந்து பற்றிய எனது பதிவு,என்னைப் பொருத்தவரை இல்லை.அந்த வார்த்தை எவ்வாறு தோன்றியது என்பதை,எனது அனுபவ அடிப்படையிலா எழுதி இருந்தேன்.அதன் வரலாற்று கூற்றுகளை முன்வைத்தே எழுதினேன்.நானென்ன?

    விதண்டாவாதத்துக்காகவா
    /ஹிந்து வேதத்தை பின்பற்றாதவனுமான
    ஹிந்து வேதங்களை அறியாதவனுமான,
    ஹிந்து வேதத்தின் படி வாழாதவனுமான,
    ஹிந்து வேதம் கூரும் தெய்வங்களை வணங்காதவனுமான,
    ஹிந்து வேதங்களை மறுப்பவனுமான,//

    இவ்வாசகங்களை இட்டு,எழுதினேன்.ம்ம்.ஹிந்துமதம் சொல்கிறது,எழுதினேன்.

    எல்லாத்துக்கும் மேலாக ஹிந்துமதம் குறித்து விவேகானந்தர் கூற்றையும் சொல்லி இருப்பேன்.

    //யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்ல,மதநல்லிணக்கப் பதிவு...//
    என சொல்லித்தான் ஆரம்பித்து இருப்பேன்..

    தாங்கள் குறிப்பிட்ட கீழ்காணும் வாசகம்:
    இஸ்லாம் வேதத்தை பின்பற்றாதவனுமான
    இஸ்லாம் வேதங்களை அறிதாதவனுமான
    இஸ்லாம் வேதத்தின்படி வாழாதவனுமான
    இஸ்லாம் வேதத்தின்படி 5 நேரம் தொழுகை செய்யாதவனுமான
    இஸ்லாம் வேதங்களை மறுப்பவனுமான

    இப்படியெல்லாம் இருப்பவனையும் முஸ்லீம் என ஒருகாலும் இஸ்லாம் சொன்னது கிடையாது.அவன் முஸ்லீம் அல்ல.

    நான் எனது வலையில்,யாரையும்,இஸ்லாத்துக்கு வாங்க,வாங்கன்னு,கூவலையே..

    இல்ல இஸ்லாம் தா பெருஸ்ஸு,மத்ததெல்லா பொய்யின்னு எங்கயாச்சும் சொல்லி இருக்கேனா?

    நான் சார்ந்து இருக்கும் மதம் குறித்த தவறான புரிதலை களையும்,தார்மீக பொருப்பு எனக்குண்டு.அதை செய்கிறேன்.

    எனது பதிவுகள் அனைத்தும்,இஸ்லாம் மீதான அவதூறுகளுக்கு பதிலாகவும்,விளக்கங்களாகவும்,இருக்குமே தவிர..மார்க்க வியாபாரமாக இருக்காது.

    பெரியார் சொன்னது ஹிந்துமதத்தின் மீதான வெறுப்பின் காரணமாக.இஸ்லாம் குறித்து அவர் உயர்வாகவே பேசியுள்ளார்,

    தமிழ்மொழி வளர்ப்பு..அதுபற்றி ஒரு பதிவே போடலாம்.அவ்ளோ இருக்கு..பாக்கலாம்.

    ஜெய்ஹிந்த்.ம்ம் இதுலையும் ஹிந்துதான்.இதில் உள்ள ஹிந்த் நாட்டை குறிக்கிறதா? அல்லது மதத்தை குறிக்கிறதா? என தாங்களே முடிவு செய்துகொள்ளவேண்டியதுதான்....

    நன்றி...

    ReplyDelete
  2. RAZIN ABDUL RAHMAN said...

    நண்பரே நான் தங்களை குறை சொல்வதற்காக இந்த பதிவை எழுதவில்லை, ரொம்ப நாளாகவே என் மனதில் கிடந்த ஒரு விஷயத்தினை எழுத கிடைத்த வாய்ப்பினையே பயன்படுத்தி கொண்டேன். அவ்வளவே
    //இப்படியெல்லாம் இருப்பவனையும் முஸ்லீம் என ஒருகாலும் இஸ்லாம் சொன்னது கிடையாது.அவன் முஸ்லீம் அல்ல// இந்த கருத்தினையே மற்ற மதங்களுக்கும் பொருத்தி பார்த்து அந்தந்த மதத்தின் கோட்பாடுகளை சரியாக பின்பற்றாதவர்கள் இந்துவும் அல்ல கிறிஸ்தவனும் அல்ல என நினைத்துக் கொண்டால், சரியாகிவிடுமல்லவா?

    //நான் எனது வலையில்,யாரையும்,இஸ்லாத்துக்கு வாங்க,வாங்கன்னு,கூவலையே..

    இல்ல இஸ்லாம் தா பெருஸ்ஸு,மத்ததெல்லா பொய்யின்னு எங்கயாச்சும் சொல்லி இருக்கேனா?//

    இப்படி நானும் எங்கும் கூறவில்லையே நண்பா? எனக்கு மதம் தேவையில்லை, கடவுள் மட்டும் போதுமானது என்று மட்டும்தான் கூறி உள்ளேன்.

    //எனது பதிவுகள் அனைத்தும்,இஸ்லாம் மீதான அவதூறுகளுக்கு பதிலாகவும்,விளக்கங்களாகவும்,இருக்குமே தவிர..மார்க்க வியாபாரமாக இருக்காத//

    நல்லது நண்பா, தொடரட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    //பெரியார் சொன்னது ஹிந்துமதத்தின் மீதான வெறுப்பின் காரணமாக.இஸ்லாம் குறித்து அவர் உயர்வாகவே பேசியுள்ளார்//

    அது அவரின் கருத்து, உண்மையிலேயே அப்படி பேசியுள்ளாரா என எனக்கு தெரியாது, ஒரு மதத்தினை உயர்த்தி இன்னொரு மதத்தினை தாழ்த்தி பேசுவது சரியாக இருக்காது என்பது என் கருத்து, இருந்தாலும் மதங்களை மற மனிதனை நினை என்பது எல்லா மதத்திற்கும் பொருந்துவதாகத்தானே உள்ளது?

    //தமிழ்மொழி வளர்ப்பு..அதுபற்றி ஒரு பதிவே போடலாம்.அவ்ளோ இருக்கு..பாக்கலாம்//

    மதங்களை விட தமிழ்மொழி வளர்ப்பு மேலானதாகவும், சரியானதாகவும் இருக்கும்.

    //ஜெய்ஹிந்த்.ம்ம் இதுலையும் ஹிந்துதான்.இதில் உள்ள ஹிந்த் நாட்டை குறிக்கிறதா? அல்லது மதத்தை குறிக்கிறதா? என தாங்களே முடிவு செய்துகொள்ளவேண்டியதுதான்//

    இரண்டில் ஒரு விரலை தொட்டு பார்த்து கொள்ள வேண்டியதுதான்.

    நண்பரே நானும் இது எதையும் விதண்டாவாதத்திற்காக எழுதவில்லை என புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன், நன்றி

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!