Wednesday, December 8, 2010

தா படம் இதுக்கு பேரு விமர்சனம்மான்னு தெரியலியே?



தா படம் எங்க ஊருல அட்டு பட தியேட்டரில ஓடுதுங்க, உங்க ஊருல பிட்டு பட தியேட்டர்ல ஓடுனாலும் கண்டிப்பா போய் பார்த்துடுங்க, ஏன்னா படம் அவ்வளவு நல்லா இருக்குதுங்க, இந்த படம் ஒரு மெசேஜ் படம், விழிப்புணர்வு ஏற்படுத்துற படம்னும் சொல்லலாம், படத்தோட கதை மற்றும் மெசேஜ் என்னன்னா, அழகா இருக்குற பொண்ண லவ் பண்ணாலோ, கல்யாணம் பண்ண நினைச்சாலோ சத்தியமா உனக்கு சாவுதாண்டான்னு டைரக்டர் நம்ம இளைஞர்களை எச்சரிக்கை பண்ணி இருக்காரு, அதனால மக்களே லவ்வு கிவ்வுன்னு சுத்தாம சரக்கு, சைட் டிஷ்னு வாழ்க்கையை ஓட்டிடுங்க.

இந்த படத்தோட கதை கோயம்பத்தூரிலிருந்து பாலக்காடு போகிற வழியில இருக்குற நவக்கரைங்கற கிராமத்துல நடக்குது, இந்த நவக்கரைக்கும், எனக்கும் என்னோட நண்பர்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு, அதனால என்னால படத்தோட நல்லா ஒன்றி பார்க்க முடிஞ்சது, அந்த நெருங்கிய தொடர்பு என்னன்னா நானும் என்னோட பிரண்ட்ஸ்சும் ஊருக்கு போகும் போதெல்லாம் நவக்கரைல இருக்குற டாஸ்மாக் பாருலதான் தண்ணி அடிப்போம், ஏன்னா அந்த ஊர தாண்டிட்டா பாலக்காடு பார்டர் வாளையார் வந்துடும், அந்த பாருதான் தமிழ்நாட்டோட கடைசி டாஸ்மாக் பார், அவ்வளவு பெருமை வாய்ந்த பார் அது, இத நான் ஏன் சொல்றேன்னா இந்த படத்துல உயிர் மண்ணுக்கு உடல் பாருக்குன்னு ஒரு டயலாக் வருது, அதனால நானும் எனக்கு தெரிஞ்ச பார பத்தி சொல்லலாம்னுதான் சொன்னேன்.


அப்புறம் படத்துல வர்ற அம்சவேணி கேரக்டர், கமல் கேரக்டர், ஸ்டூடியோ வச்சிருக்கற பிரண்ட்டு, ரோபோ சங்கர் கேரக்டர், பிரண்டோட தங்கச்சி கேரக்டர், அவங்க லவ் பண்ர பையன் கேரக்டர் எல்லாம் எங்க ஊருல இருக்குறவங்கள பார்த்த மாதிரியே இருந்தது, நல்லா காமெடியா இருந்தது, அத்னால எங்க ஊருல இருக்குறவங்க எல்லாம் காமெடி பீசுன்னு நினைச்சுராதீங்க, ஆனா என்ன வருத்தம்னா படத்துல காட்டுற பொண்ணெல்லாம் கதாநாயகிய தவிர மீதி எல்லாரும் சுமாரா இருக்குற மாதிரியே காமிச்சிருக்காங்க, எங்க ஊருலயும் கதாநாயகி மாதிரி அழகான பொண்ணுங்க நிறைய பேரு இருக்காங்கங்கறத சவாலாவே சொல்லிக்கிறேன், ஆனா என்ன அவங்க எங்களைத்தான் பார்க்க மாட்டாங்க,


படத்தோட ஹீரோவ பத்தி கண்டிப்பா சொல்லியாகணும், நல்லா நடிச்சு இருக்காருங்க, இந்த படத்துக்காக பிளைட் ஓட்டர வேலை எல்லாம் விட்டுட்டு வந்திருக்காராம், அவர மறுபடியும் அந்த பிளைட்தான் காப்பாத்த வேண்டிய நிலமைக்கு வராம இருந்தா சரி, கடவுளை வேண்டிக்கிறேன், ஆனா ஒண்ணு படம் பூரா பொண்ணுங்களை பார்த்தா மிஷ்கின் படம் ஹீரோ மாதிரி தலைய குனிஞ்சுக்குறாரு, வெட்கமா என்னமோ? படத்துல எனக்கு புடிச்ச காட்சி என்னன்னா பொண்ண கரக்ட் பண்ணுரதுக்காக கண்ணே கலைமானேன்னு பாடுவாரு, அது ரொம்ப ஸ்பீடா போயி குத்துப்பாட்டு ஆகிடும், ரொம்ப ஜோக்கா இருந்தது, அப்புறம் பஸ்சுல ஒரு பொண்ண கரக்ட் பண்ண வளையோசை பாட்ட போட்டு கிஸ் பண்னும் போது அது கிழவியா இருக்கும், செம காமெடிங்க இப்படி படம் பூரா இண்டர்வெல் வரைக்கும் குவாட்டரை தண்ணி கலக்காம அடிச்ச மாதிரி ஜிவ்வுன்னு போகுதுங்க, இண்டர்வெல்லுக்கு அப்புறம்தான் தலைசுத்தற மாதிரி ஸ்லோவா போகுது, ஆனா கிளைமேக்ஸ் யாராலும் எதிர்பார்க்க முடியாது, ரொம்ப வித்தியாசமா பண்ணி இருக்காரு டைரக்டர்.


                                                (வளையோசை பாட்டு சீனு)

இது எல்லாம் ஒரு விமர்சனம்மான்னு நினைச்சு படம் பார்க்காம இருந்துராதீங்க, ஏன்னா பார்லே 20 : 20 சாப்பிடுங்க, ஷார்ட் கட் அடிங்கன்னு ஒரு விளம்பரம் வருது, அதே மாதிரி படம் பாருங்க, என்ஜாய் பண்ணுங்க, படம் ரொம்ப நல்லா இருக்குதுதுதுதுது.

மொத்ததுல தா - என்னத்த தர்றதுன்னு தெரியல, அதான் ஏற்கனவே கொடுத்த காசுக்கு மேல கூவிட்டனே, இதுக்கும் மேல என்ன தர்றது, டிக்கட்டுக்கு அம்பது ரூபா கொடுத்திட்டேன், அதனால நீங்களும் போய் படம் பார்த்து வெற்றியை தந்திடுங்க.

[ அன்பார்ந்த இண்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ்10 வாக்காள பெருங்குடி மக்களே, முடிஞ்சா ஓட்டு போடுங்க, முடியாட்டி கள்ள ஓட்டாவது போடுங்க, என்னோட ஒரு சினிமா விமர்சனமாவது முண்ணனில வரணும், இல்லைன்னா இப்படி அடுத்தடுத்து வர படம் பார்த்து விமர்சனம் எழுதிகிட்டே இருப்பேன்னு சொல்லிக்கறேன், நன்றி ]





8 comments:

  1. இது எல்லாம் ஒரு விமர்சனம்மான்னு நினைச்சு படம் பார்க்காம இருந்துராதீங்க, ஏன்னா பார்லே 20 : 20 சாப்பிடுங்க, ஷார்ட் கட் அடிங்கன்னு ஒரு விளம்பரம் வருது, அதே மாதிரி படம் பாருங்க, என்ஜாய் பண்ணுங்க, படம் ரொம்ப நல்லா இருக்குதுதுதுதுது.


    .....ரைட்டு!!!

    ReplyDelete
  2. என்னது மறுபடியும் திரை விமர்சனம் எழுதிறீங்களா?... வேண்டாம் வேண்டாம் நான் ஒட்டு போட்டேன் ... விமர்சனம் அருவை ச்சி அருமை .. :)

    ReplyDelete
  3. Chitra said...

    வாங்க சித்ரா மேடம்

    ReplyDelete
  4. Venkat Saran. said...

    வாங்க வெங்கட் நல்லவேளை ஓட்டு போட்டுட்டீங்க, அதனால தப்பிச்சீங்க

    ReplyDelete
  5. // அன்பார்ந்த இண்ட்லி, தமிழ்மணம், உலவு, தமிழ்10 வாக்காள பெருங்குடி மக்களே, முடிஞ்சா ஓட்டு போடுங்க //
    இதுல என்ன தயக்கம் குத்துகுத்துன்னு குத்தியாச்சு...

    ReplyDelete
  6. philosophy prabhakaran said...

    நன்றி பிரபாகரன், குத்துனதுல கம்ப்யூட்டர் ஒன்னும் உடஞ்சிடலியே?

    ReplyDelete
  7. இந்த விமர்சனத்துக்கு என்னங்க.. சூப்பரா இருக்கு..

    ReplyDelete
  8. பதிவுலகில் பாபு said...

    நீங்களாவ்து நல்லா இருக்குன்னு சொன்னீங்களே, நன்றி பாபு சார்

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!