Thursday, June 23, 2011

அவன் இவன் படம்



சார் ஒரு கட்டிங் கிடைக்குமா?
இதுக்கு முன்னாடி உன்னை நான் பார்த்திருக்கனா?
இல்லை
அப்புறம்?
அது ஒன்னும் இல்லைங்க, ஒரு நல்ல காரியம் செய்யுறதுக்கு முன்னாடி ஒரு கட்டிங் போட்டா நல்லதே நடக்கும்னு என் பிரண்டு சொல்லி இருக்கான்ங்க, அதான்
அப்படியா? சரி அப்படி என்ன நல்ல காரியம் பண்ண போறே?
என் ஆளுகிட்ட என் லவ்வ சொல்ல போறேன்

என்னடா இது அவன் இவன் படத்த பத்தி எழுதறதுக்கு பதிலா என்னென்னமோ எழுதி வெச்சிருக்கானேன்னு பார்க்குறீங்களா? அது ஒன்னுமில்லைங்க, அவன் இவன் காமெடி படம்னு சொன்னாங்க, ஆனா அப்படி ஒன்னும் பெரிசா காமெடி இல்லைங்க, இருக்குற கொஞ்ச நஞ்சம் மொக்கை காமெடிக்கும் பெரிசா ஒன்னும் சிரிக்க முடியலைங்க,

ஆனா படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஜித்தன் ரமேஷ் நடிச்ச பிள்ளையார் கோவில் கடைசி தெரு படத்தோட டிரைலர் போட்டாங்க, ரொம்ப நல்லா இருந்துச்சு, அந்த படத்துலதான் மேல இருக்குற டயலாக் வருது, அதான் கொஞ்சமாவது காமெடியா இருக்கட்டுமேன்னு போட்டேன், சரி இனி அவன் இவன்


படத்தோட கதையும், படத்தோட கண்டிசனும் எல்லாருக்குமே தெரியும், என்னதான் பாலா படம்னாலும் படம் நிறைய பேருக்கு பிடிக்கலை, எப்பவுமே பாலாகிட்ட வித்தியாசத்தை எதிர்பார்க்கிற ரசிகர்கள், இந்த வித்தியாசத்தை சத்தியமா எதிர்பார்க்கவும் இல்லை, ரசிக்கவும் இல்லையோன்னு தோணுது, ஒரு இயக்குனர இந்த மாதிரிதான் படம் எடுக்கனும்னு யாரும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது, ஆனாலும் அதையும் மீறி ஒரு சின்ன ஏமாற்றம் ஏற்படுவது அவரின் பிம்பத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்புகளினால்தான்னு நினைக்கிறேன்

இது போல படம் எடுக்க நிறைய இயக்குனர்கள் இருக்காங்க சார், ஆனா இதுவரைக்கும் நீங்க எடுத்த படம் மாதிரி எடுக்க குறைந்த ஆட்களே இருக்காங்க, அதனாலத்தான் மீண்டும் ஒரு நல்ல அழுத்தமான படத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் பாலா சார், அதற்காக இந்த படம் நல்லாவே இல்லை என்று சொல்ல முடியாது, நிச்சயமாக ஒருமுறை பார்க்க கூடிய படம்தான், சில வசனங்கள் மட்டும் என்னதான் இயல்பான வார்த்தைகள் என்றாலும் தியேட்டர் எனும் பொது வெளியில் கேட்க பிடிக்கவில்லை

படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கும் விஷால் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர், சாதாரண கண்ணை ஒன்னரை கண்ணாக வைத்துக் கொண்டு நடிப்பதில் உள்ள சிரமம் எல்லாருக்குமே நன்றாக புரியும், எந்த அரசியல் தலையீடும் இல்லாவிட்டால் கண்டிப்பாக விருதுகள் நிச்சயம், ஆர்யா இப்படியே மொக்கை காமெடி பண்ணிட்டு இருந்தார்னா சீக்கிரமே ’’அறிந்தும் அறியாமலும்’’ ஆகிர வேண்டியதுதான்


அப்புறம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் ஆர்.கே வில்லனாக கடைசி நேரத்தில் சிறிது காட்சிகளிலே வந்தாலும், அந்த சாதாரண பார்வையிலேயே ஒட்டு மொத்த படத்திற்கான வில்லன் எனும் தோரணையை அசால்ட்டாக கொண்டு வந்ததுள்ளார், சிறந்த நடிப்பு


அப்புறம் ஜமீந்தாராக வரும் ஆர்.எம். குமார், படம் முழுவதுமே இவரையே சுற்றி வருகிறது, மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார், எனினும் கடைசியில் நிர்வாணமாக அடிவாங்கி இறப்பது சற்றும் பொருந்தவில்லை, படம் முழுக்க கண்ணியமானவராக காட்டி கடைசியில் ஒரு பிரச்சனைக்காக நிர்வாணப்படுத்தி நடிக்க வைக்க வேண்டுமா? என தோன்றுகிறது, நெட்ல படிச்சதுலேயே வித்தியாசமான ஒரு விமர்சனம் உலவன் நெட் இணையதளத்தில் பார்த்தேன், அதில் பிரபாகரன் அவர்கள் ஈழப்போரில் இறந்ததை காட்சிப்படுத்தியது போல் உள்ளது என கூறியிருக்கிறார்கள், சுட்டி கீழே


மொத்தத்தில் பாலா அவர்கள் ஒரு படத்துக்கு இரண்டு வருசமோ, மூணு வருசமோ ஆனாலும் பரவாயில்லை, மெதுவாவே எடுக்கட்டும், சீக்கிரம் படம் எடுத்து கொடுங்கன்னு அவர யாரும் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா சரிதான், ஒரு இயக்குனரோட சுதந்திரத்தில தலையிட்டு அவர சீக்கிரம் படம் எடுக்க சொல்லி அவரோட கற்பனைத்திறனை சிதைக்காம இருக்கறதுதான் நல்லது, கல்பாத்தி அகோரம் சாருக்கு கேசு வேற ஒன்னு ரெடியா இருக்குது

இந்த படத்தை தமிழ்நாடு தியேட்டர்ல பார்த்தேன், ஒரளவு நல்ல கூட்டம்தான், பக்கத்துல உட்கார்ந்து இருந்தவரு கதாநாயகி குட்டிகரணம் அடிச்சதுக்கு கூட கைதட்டி சிரிச்சிட்டு இருந்தாரு, ஒருவேளை நமக்குதான் நகைச்சுவை உணர்ச்சி குறைஞ்சிடுச்சோன்னு எனக்கே டவுட்டா இருக்குது, நான் டவுட்டா பார்த்ததை பார்த்த அவர், பாலா படம் சார், நான் பார்க்கனும் எதிர்பார்த்த படம்னார்

என்னடா எல்லாரும் எதிர்பார்த்துட்டு வந்துருக்காங்க, நாம மட்டும் எதிர்பாக்காம வந்துட்டோமோன்னு பீலிங் வந்துருச்சு, அதனால இனிமே நானும் எதிர்பாக்கிறதா முடிவு பண்ணிட்டேன், நான் அடுத்ததா எதிர்பாக்கிற படம் நம்ம பசுநேசன் ராமராஜன் அவர்கள் நடிச்ச மேதை படத்ததான் 

சரி இந்த படத்துக்கு எதுக்குடா U/A சர்பிகேட் கொடுத்திருக்காங்கான்னு என் பிரண்டு கேட்டான், எனக்கு தெரியலைடான்னு சொன்னேன், கொஞ்ச நேரம் யோசிச்சவன் சொன்னான், டேய் பொம்பளைங்க நிர்வாணமா நடிச்சாத்தான் A சர்டிபிகேட் கொடுப்பாங்க, இங்க ஆம்பிளைதான நிர்வாணமா நடிச்சிருக்காரு அதான் U/A சர்டிபிகேட் கொடுத்திருக்காங்கன்னு, எனக்கு இப்பவரைக்கும் என்ன சொல்றதுன்னே தெரியலைங்க..!
  

14 comments:

  1. ///இந்த படத்தை தமிழ்நாடு தியேட்டர்ல பார்த்தேன்///


    நான் ஆந்திராவுக்கு சென்று பார்க்கலாம் என்று இருக்கிறேன்

    ReplyDelete
  2. ///நான் அடுத்ததா எதிர்பாக்கிற படம் நம்ம பசுநேசன் ராமராஜன் அவர்கள் நடிச்ச மேதை படத்ததான் ///


    சார் நீங்களும் மேதைதான்

    ReplyDelete
  3. //டேய் பொம்பளைங்க நிர்வாணமா நடிச்சாத்தான் A சர்டிபிகேட் கொடுப்பாங்க, இங்க ஆம்பிளைதான நிர்வாணமா நடிச்சிருக்காரு அதான் U/A// சூப்பர்...ஆண்களுக்கு இந்த சமூகத்தில் மரியாதையே இல்லைங்கிறதை ஆணித்தரமாச் சொல்லி இருக்கீங்க நைட்டு.

    ReplyDelete
  4. என்னங்க இப்படி சொல்லிடிங்க..

    ReplyDelete
  5. பிள்ளையார் தெரு கடைசி தெரு படமாவது நல்லாயிருக்கான்னு பார்ப்போம்..

    ReplyDelete
  6. ///இந்த படத்தை தமிழ்நாடு தியேட்டர்ல பார்த்தேன்///


    நான் ஆந்திராவுக்கு சென்று பார்க்கலாம் என்று இருக்கிறேன்//

    நான் அமெரிக்கா போய் பார்க்குறேன்

    ReplyDelete
  7. வெள்ளிக்கிழமை காலை திரை அரங்கிற்கு சென்றேன், ரீல்ஸ் வரவில்லை, நாளை வா என்றான் அங்கிருந்த சிறுவன்!!!! வெள்ளி இரவே விமர்சனம் வாசித்தேன், இன்றுவரை அவன் இவன் பார்க்கவில்லை. அவன் இவனை பார்த்து என்னால் உண்மையான நிச்சயம் விமர்சனம் எழுத முடியாது, நிச்சயமா எனக்கு அவன் இவன் பிடிக்கும், ஏன்னா எனக்கு பாபாவும், குசேலனும், நான் கடவுளும், பீமாவும், ராவணாவும் கூட பிடித்தது.

    ReplyDelete
  8. சகோ, வித்தியாசமான ஒரு விமர்சனத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க...

    லேட்டான விமர்சனமாக இருந்தாலும், சூப்பராக இருக்கு சகோ.

    ReplyDelete
  9. @ நா.மணிவண்ணன்

    பேசாம ஆந்திராவுக்கே போயிருங்க மணி

    ReplyDelete
  10. @ செங்கோவி

    நீங்க நார்மலா பேசறீங்களா, நக்கலா பேசுறீங்களான்னே புரிய மாட்டேங்குது நண்பா

    ReplyDelete
  11. @ # கவிதை வீதி # சௌந்தர்

    நான் ஒன்னுமே சொல்லலீங்க செளந்தர், அந்த படம் நல்ல காமெடியா இருக்கும் போல வெயிட் பண்ணி பாப்போம்

    ReplyDelete
  12. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

    அமெரிக்காவுல கூட இந்த படம் ஓடுதா????

    ReplyDelete
  13. @ எப்பூடி..

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் தல, இந்த ப்டமும் பார்க்க கூடிய படம்தான், ஆனா இதற்கு முந்தைய பாலா படங்கள் போல அழுத்தமான கதையோ சம்பவங்களோ இல்லை, சாதாரணமான ஒரு கதைதான், எனக்கும் பிடித்திருந்தது

    ReplyDelete
  14. @ நிரூபன்

    வித்தியாசம் எல்லாம் ஒன்னுமில்லீங்க நிரூபன், படம் பார்த்து ரெண்டு மூணு நாளு ஆகிருச்சு, எல்லாம் மறந்தும் போச்சு, அதான் அப்படியே சும்மா மேலோட்டமா தோணுனத எழுதிட்டேன்

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!